கொச்சி : வண்ணமயமான தீபாவளி திருநாளையொட்டி, நிறுவனத்திற்கு நிறுவனம் சலுகைகளை அளித்துவரும் வேளையில், இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் அட்டகாசமான சலுகைகளை அறிவித்து அசத்தியுள்ளது.
இதுகுறித்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கேரள மற்றும் தமிழ்நாடு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த தீபாவளி திருநாளையொட்டி, எஸ்டிடி பேக் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான புதிய பூஸ்டர் பேக்கை அறிமுகப்படுத்துவதாகவும், வளைகுடா நாடுகளில் மலையாள இனத்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாகவும், இதற்காக, இந்த பேக்கை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், அதேபோல், எஸ்டிடி பேக் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்படி ரூ. 16 எஸ்டிடி பேக்கை ஆக்டிவேட் செய்தால், ஏர்டெல் எஸ்டிடி மொபைல்களுக்கு 3 நிமிடத்திற்கு ரூ. 1ம், மற்ற நெட்வொர்க் மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்கு 3 நிமிடத்திற்கு ரூ. 1.20 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply