மும்பை: இந்திய ஆட்டோ ஜாம்பவானான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா (எம் அன்ட் எம்) இன்னும் 18 மாதத்தில் 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதில் மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி மற்றும் லோகனின் புதிய வடிவமும் அடக்கம்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எஸ்யுவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதிலும் எம் அன்ட் எம் எஸ்யுவிக்கள் தயாரிப்பில் முனைப்பாக உள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது,
2011-13 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு ரூ. 7000 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது. மேலும், தொழிலாளர்களை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்திய கார் சந்தையில் அதிவேகமாக வளர்ந்து வரும் எஸ்யுவி கார்களின் மூலம் லாபம் அடைய திட்டமிட்டுள்ளது. ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் வளர்ச்சியை இரண்டு மடங்காக்க டிராக்டர் விற்பனையைத் தான் நம்பியுள்ளது.
உலகச் சந்தையில் எங்கள் நிறுவன எஸ்யுவிக்கள் 40 சதவிகிதம் உள்ளன. இதில் 15 சதவிகிதம் தான் உள்ளூர் சந்தையில் விற்கப்படுகிறது. அதிகரித்து வரும் கிராக்கியை அடுத்து உள்ளூர் சந்தையிலேயே 22-23 சதவிகித கார்கள் விற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் புதிய மாடல்களின் விலை சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற மாதிரி அமையும். எனவே, எஸ்யுவி சைலோவின் புதிய எடிஷன் ரூ. 5 லட்சத்திற்கு கிடைக்கும்.
இதையடுத்து தற்போதுள்ள மாடல் கார்களின் விலையை விட இவை 35-40 சதவிகிதம் குறைவாக இருக்கும். இந்த கார்கள் 4 மீ நீளம், 1500 சிசி டீசல் என்ஜின், 1200 சிசி பெட்ரோல் என்ஜின் கொண்டதாக மறுவடிவமைக்கப்படும்.
தற்போது தென் ஆப்பிரிக்கச் சந்தையில் இருக்கும் கமாண்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த பெரிய அறிமுகம் என்னவென்றால் உலக அளவில் எஸ்யுவி ஸ்கார்பியோ அறிமுகப்படுத்தப்படுவது தான். இதற்காக ஏற்கனவே ரூ. 700-800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா சாங்யாங் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ளவிருக்கிறது. இது முடிந்த பிறகு சாங்யாங் வண்டிகளும் அறிமுகப்படுத்தப்படும்.
Leave a Reply