இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலையின் வளாகங்களை பல மாநிலங்களில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகம்(ஐ.ஜி.என்.டி.யு.), சமீபத்தில் மத்தியபிரதேசத்தின் அமர்கன்டாக் என்ற நகரில் செயல்பட தொடங்கியது. இதன்பொருட்டு, மத்தியபிரதேச மாநில அரசாங்கம் 370 ஏக்கர் நிலத்தை அந்த பல்கலைக்கழகத்திற்காக ஒப்படைத்துள்ளது. அப்பல்கலை வளாகத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
தற்சமயம் அப்பல்கலைக்கழகம் இளநிலை அளவில் 22 பாடத்திட்டங்களை நடத்துகிறது. இந்த இளநிலை படிப்புகளில் தற்போது மொத்தம் 769 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் 392 பேர் பழங்குடியினர், 80 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் 255 பேர் மாணவிகள்.
இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் தனது மண்டல வளாகத்தை இருவகை பாடத்திட்டங்களுடன் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கே நிரந்தர வளாகத்தை ஏற்படுத்த அம்மாநில அரசாங்கம் 300 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இதைத்தவிர ஆந்திரா, ஒரிசா, கேரளா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் தனது மண்டல வளாகங்களை அமைக்க, அம்மாநில அரசுகளிடம் இப்பல்கலைக்கழகம் அனுமதி கோரியுள்ளது.
Leave a Reply