அக்கவுண்டிங் துறையில் நவீனகால வேலை வாய்ப்புகள்

posted in: கல்வி | 0

இன்றைய இளைஞர்களின் கனவுகள் ஐ.டி. மற்றும் பொறியியல் துறைகளில் மட்டுமே பெரும்பாலும் மையமிட்டுள்ளன.

அதேசமயம் பழைய துறையான அக்கவுண்டிங் சம்பந்தமான துறையும் இன்றைய கால சூழலுக்கேற்றவாறு புதுப்பொலிவு பெற்றுள்ளது. அதற்கேற்ப பல நவீன வேலை வாய்ப்புகளும் அத்துறையில் பெருகியுள்ளன என்பதை இளைஞர்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிட்டி குரூப், அக்சன்ஜர், நெஸ்ட்லே, ஜி மணி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் நிதித்துறை அதிகாரியாக இருக்க விருப்பமா? உங்கள் பெயருக்கடுத்து போடப்படும் “மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்” என்ற பட்டமானது, உலகளவில் ஏறக்குறைய 4500௦௦ நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படக் கூடியதாய் இருக்க வேண்டுமா? மேற்கூறிய ஆசைகள் நிறைவேற வேண்டுமாயின் சி.ஐ.எம்.எ(சார்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்ஸ்) சான்றிதழ் பெறுவதைப் பற்றி நீங்கள் அவசியம் யோசிக்க வேண்டும். இதற்கு 12 ஆம் வகுப்பு தேறியிருந்தால் போதுமானது. ஆடிட்டிங் போன்ற வழக்கமான பணிகளிலிருந்து விலகி, வணிகத் துறைகளில் வேறு எல்லைகளுக்கு செல்லும் சிறந்த வழிகளை சி.ஐ.எம்.எ வழங்குகிறது.

சி.ஐ.எம்.எ – ஒரு அறிமுகம்

கடந்த 1919 ஆம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்ட் வொர்க்ஸ் அக்கவுண்டன்ட்ஸ்(ஐ.சி.டபிள்யூ.எ) என்ற பெயரில் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், 1972 -இல் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்ஸ்(ஐ.சி.எம்.எ) என்றும், 1986 -இல் சார்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்ஸ்(சி.ஐ.எம்.எ) என்றும் பெயர் மாற்றப்பட்டது. 2008 -இல் கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கழகத்துடன் இணைந்து, சி.ஐ.எம்.எ, மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் கல்விக்கான ஒரு மையத்தை ஏற்படுத்தியது.

உலகெங்கிலும் 168 நாடுகளில் 1,70,000௦௦௦௦ மாணவர்களைக் கொண்டு இயங்கும் சி.ஐ.எம்.எ -வின் சான்றிதழ், மேனேஜ்மென்ட் மற்றும் அக்கவுண்டிங் துறையில் உலகளவில் பரவலாக விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருக்கிறது. அதேசமயம் இந்திய சூழலில் பழக்கப்பட்ட நமக்கு, இந்த சி.ஐ.எம்.எ -வானது சி.எ மற்றும் சி.எப்.எ -ஐ விட உயர்ந்ததா என்ற எண்ணம் எழும். அதற்கு இதுதான் பதில்,

“சி.ஐ.எம்.எ -வானது மேற்கண்ட இரண்டு படிப்புகளைவிட, மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங், வியாபார வியூகம், நிதி ஆதார வியூகம் போன்றவற்றில் அதிக ஆராய்ச்சி அம்சங்களையும், கையாளுதல் அம்சங்களையும் கொண்டது” என்பதுதான்.

சி.ஐ.எம்.எ -க்கான நுழைவாயில்:

சி.ஐ.எம்.எ -வில் சேர பல வழிகள் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு அவசியமில்லை. 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. 12 ஆம் வகுப்பு முடித்து சி.ஐ.எம்.எ படிப்பை தொடங்குபவர்கள், சி.ஐ.எம்.எ பிசினஸ் அக்கவுண்டிங் சான்றிதழைப் பெற 5 வகை அளவீடுகள் உள்ளதோடு, கணினி அடிப்படையிலான மதிப்பீடுகளும் உண்டு. இந்த கணினித் தேர்வை ஒரு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். மேலும் இதை ஒருவர் தனது வசதிக்கேற்ப 3 மாதங்களிலோ, 6 மாதங்களிலோ முடிக்கலாம்.

பொதுவாக மாணவர்கள் பி.பி.எ அல்லது பி.காம் அல்லது அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் படிப்புகளை முடித்துவிட்டு வரலாம். ஒருவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம்(ஹானர்ஸ்) படித்திருந்தாலோ, ஒருவர் முதல் நிலையிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலோ தவிர, மற்ற மாணவர்கள் அனைவரும் முதல் நிலையில் சேருகிறார்கள். ஒரு புத்திசாலி மாணவருக்கு சில இடங்களில் 2 முதல் 3 வருடங்கள் ஆகலாம். அதேசமயம் ஐ.சி.டபிள்யூ.எ அல்லது எம்.பி.எ. முடித்தவர்கள் 1.5 வருடத்திற்குள் முடிக்கும் வழிகள் உள்ளன. இந்த சான்றிதழை பெறுவதற்கான கால அளவு எதுவும் தனிநபருக்கு விதிக்கப்படவில்லை.

சி.ஐ.எம்.எ பாடத்தின் நிலைகள்:

இந்த படிப்பில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு மதிப்பீடு உள்ளது. எனவே மாணவர்கள் எந்த நிலையிலும் சேரவோ, வெளியேறவோ இயலும். ஒருவர் பாதியிலேயே வெளியேறினாலும் அவர் அதனால் அதிகம் இழக்கமாட்டார். ஒவ்வொரு நிலையிலும் ஒரு மாணவர் வெளிப்படுத்தக்கூடிய திறன்கள் இருக்கின்றன. இதை ஒவ்வொரு நிலையிலும் பார்க்க முடியும். செயலாக்க நிலை என்பது முற்றிலும் செயலாக்க அறிவு சம்பந்தப்பட்டது. இதைத்தவிர மேலாண்மை நிலை, கண்காணிப்பு நிலை மற்றும் வியூக நிலை போன்றவை உள்ளன. மொத்தத்தில் 14 தேர்வுகள் இதில் உள்ளன. ஒருவர் முழு அளவிலான சி.ஐ.எம்.எ சான்றிதழ் நிபுணராக வேண்டுமெனில், இந்த 14 தேர்வுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

சி.ஐ.எம்.எ -வில் பயிற்சி அல்லது வகுப்பறை பாடங்கள் உண்டா?

இல்லை. சி.எ போல, வேறொரு அனுபவமிக்க சி.எ உடனான ஆரம்பகால பயிற்சி இதில் தேவையில்லை. பயிற்சி மையங்கள் பெங்களூர் க்ரைஸ்ட் பல்கலைக்கழகம், அகமதாபாத் எச்.எல் கல்லூரி, சென்னை எல்.ஐ.பி.எ, மும்பை கே.ஜே சோமையா, டெல்லி பைரோன் போன்ற இடங்களில் உள்ளன. சி.ஐ.எம்.எ ஒரே தேதியில் 90௦ நாடுகளில், 240௦ தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துகிறது. அந்த தேர்வுகள் அனைத்தும் ஒரே உள்ளடக்கங்களையும், முறைகளையும் கொண்டுள்ளன. இந்த தேர்வுகள் ஒவ்வொன்றும் 3 மணி நேரங்கள் நடைபெறும். எனவே ஒருவர் தனக்கு வசதியான எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இதை எழுதலாம். சி.ஐ.எம்.எ இந்தியாவில் 9 தேர்வு மையங்களைக் கொண்டுள்ளது. பல நகரங்களில் இம்மையங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலில் உள்ளன. மேலும் பயிற்சி மையங்களாக உள்ள அனைத்து கல்லூரிகளும் தங்கள் சொந்த வளாகங்களில் தேர்வை நடத்துகின்றன.

சி.ஐ.எம்.எ -க்கு ஆகும் செலவு:

பிசினஸ் அக்கவுண்டிங் -இல் சி.ஐ.எம்.எ சான்றிதழுக்காக கல்வி கட்டணமாக ரூ. 20,000௦௦௦௦ வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் மாணவர்கள் தங்களுக்கு இன்னும் சிறப்பு பயிற்சி வேண்டுமென நினைத்தால், மேலும் கூடுதலான கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்புகளும், ஆன்லைன் கற்பித்தல்களும் உண்டு. ஆன்லைன் வசதியைப் பயன்படுத்த மாதம் 50 பிரிட்டிஷ் பவுண்டுகள் செலவாகும். சி.ஐ.எம்.எ -இல் பயன்படுத்தப்படும் 5 அளவீடுகள் கொண்ட சான்றிதழ் பாடத்திற்கு ரூ.8,000௦௦௦ வசூலிக்கப்படுகிறது. இதன்பிறகு ஒருவர் முழு சி.ஐ.எம்.எ சான்று பெற்றவராக ஆக முடியும்.

இந்த வகையான தகுதியைப் பெற ரூ.80,000௦௦௦௦ செலவாகும். மேலும் இதில் சான்றிதழ் படிப்பை உள்ளடக்க விரும்பினால் ரூ.1 லட்சம் வரை செலவாகும். இதற்கான நல்ல விவரமான பாட புத்தகங்கள் முக்கிய வழங்குதல் மையங்களில் கிடைக்கின்றன. ஒரு புத்தகத்தின் விலை ரூ.720௦. ஒரு பேப்பருக்கு ஒரு பாடப்புத்தகம் தேவை. மேலும் வேறு பல பரிந்துரைக்கப்பட்ட பாடத் தொகுப்புகளும் உள்ளன. ஒருவர் சான்றிதழ் நிலையில் இந்தப் படிப்பை ஆரம்பித்தால், அனைத்து பாடப்புத்தகங்களையும் வாங்க வேண்டும் மற்றும் சி.ஐ.எம்.எ வலைத்தளத்தில் உறுப்பினராக வேண்டும். இதன்மூலம் அவர் 3 வருடத்தில் இப்படிப்பை முடிக்க ரூ.1,59,000௦௦௦ மொத்தமாக செலவாகும்.

இப்படிப்பிற்கு அங்கீகாரம் உள்ளதா?

இது ஒரு கடினமான கேள்விதான். தனியார் நிறுவனங்களைத் தவிர, இது இன்னும் ஒரு உயர்கல்வி தகுதியாக எந்த பல்கலைக்கழகத்தாலும், அரசாங்க அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இந்த தகுதியின் மூலம் நீங்கள் எந்த அரசு பணியிலும் சேர முடியாது(சில உயர்ந்த அமைப்புகள் இந்த கல்வித் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கூட).

சி.ஐ.எம்.எ நிர்வாக இயக்குனர் டாக்டர். ராபர்ட் ஜெல்லி, “சி.ஐ.எம்.எ சான்றிதழ் என்பது ஒரு தனியான பாஸ்போர்ட். ஏனெனில் இந்த தகுதியானது நீங்கள் பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் உங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *