வணிக படிப்புகளுக்கான பலவித நுழைவுத் தேர்வுகள்

posted in: கல்வி | 0

வணிக மேலாண்மை துறையில் சோபிக்க விரும்பும் மாணவர்கள், புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் சேர்வதை லட்சியமாக கொண்டுள்ளார்கள்.

எம்.பி.ஏ. போன்ற வணிகப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் முக்கியமானது &’கேட்&’. அதேசமயம் அதைத் தவிர்த்து, வேறு பல நுழைவுத் தேர்வுகளும் வணிகப் படிப்புகளுக்காக நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் அக்டோபரில் துவங்கி நவம்பரில் முடிவடைகின்றன. கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை ஐ.ஐ.எம் -கள் தவிர, வேறு பல முன்னணி வணிகப் பள்ளிகளான எஸ்.பி. ஜெயின், எம்.டி.ஐ போன்றவற்றில் எம்.பி.ஏ. சேர பயன்படுத்திக்கொள்வதில் மாணவர்களின் கவனம் இருக்கிறது. கேட் தேர்வுக்கு தயார்செய்து அதை எழுதியப் பிறகு, வேறு பல நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பல மாணவர்களின் மனதில் இருக்கிறது. அந்த தேர்வுகள் அவற்றின் வடிவமைப்பில் ஒன்றுக்கொன்று மாறுகின்றன. அத்தகைய முக்கியமான தேர்வுகள் சிலவற்றை, அவற்றின் கடந்த வருட வடிவமைப்புகளின் படியும், அவற்றுக்கு தயாராகும் முறை பற்றியும் இங்கு காண்போம்.

எப்.எம்.எஸ் 2010௦:

இந்த தேர்வில் 2 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டிய 200௦௦ கேள்விகள் கேட்கப்படும். எனவே வேகம் முக்கியம். கேள்விகளின் எண்ணிக்கையானது அறிவிக்கப்படாமல் இருந்து கடந்த வருடம்தான் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த வருட கேள்வித்தாளுக்கும் அதற்கு முந்தைய வருட கேள்வித்தாளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசம் எதுவெனில், ஆர்.சி மற்றும் வார்த்தை வலப் பிரிவுகள்தான். எந்த நுழைவுத்தேர்வுகளிலும் இல்லாத வகையில் ஆர்.சி பிரிவானது இந்த தேர்வில்தான் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தது. முந்தைய தேர்வுகளில் கேட்கப்படாத வார்த்தை வளம் சம்பந்தமான கேள்விகள் கடந்த தேர்வில் கேட்கப்பட்டன. இத்தேர்வில் மொத்தமான மற்றும் ஒவ்வொரு பிரிவுக்குமான கட்-ஆப் மதிப்பெண்கள் 50௦ சதவீதம்.

ஐ.ஐ.எப்.டி 2009:

இந்த தேர்வானது, அதன் மதிப்பிடும் முறைகள், பிரிவுகளின் எண்ணிக்கை, பிரிவு வாரியான கட்-ஆப் முறைகள் போன்றவையால் மாணவர்களுக்கு எப்போதுமே குழப்பமாக இருந்துள்ளது. ஆனால் கடந்த வருடம் இத்தேர்வு மிகவும் தெளிவாக, குழப்பமற்ற வகையில் இருந்ததுடன், ஒவ்வொரு பிரிவுக்கும் கட்-ஆப் மதிப்பெண்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐ.ஐ.எப்.டி 2009 தேர்வானது, குறைக்கப்பட்ட 4 பிரிவுகளோடு 122 கேள்விகளைக் கொண்டிருந்தது. 0.4 முதல் 1 வரையான எளிமையான மதிப்பெண் முறையை அந்த தேர்வு கொண்டிருந்தது. ஆயினும் அளவீட்டு கணிதப் பிரிவு, கடினமான கணக்கீட்டு – தீவிர டி.ஐ. பிரிவு என்று கடந்தாண்டு இடம்பெற்ற பிரிவுகள், அந்த தேர்வுகளுக்கே உரிய கடினத்தன்மையை நிரூபித்து விட்டன.

ஐ.ஆர்.எம்.ஏ 2009:

இந்த தேர்வானது மாணவர்கள் ஒரு நல்ல வணிகப் பள்ளியில் சேர்வதற்கு துணை செய்வதோடு மட்டுமின்றி, வணிகப் பாடங்களைப் பற்றிய ஒரு தெளிவான அலசலை தருகிறது. இத்தேர்வில் 200௦௦ கேள்விகள் கேட்கப்படும், வேகம் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு தேர்வில் பெரிய ஆச்சர்யமான அம்சங்கள் எதுவுமில்லை. கடந்த காலங்களில் “சமூகம் சார்ந்த பிரச்சினைகள்” பகுதியின் மதிப்பெண்கள்தான் தேர்வெழுதுபவர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும். கடந்த ஆண்டு தேர்வில் இலக்கணம் மற்றும் சிந்தித்தல் பகுதியை விட, வார்த்தை வள பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜே.எம்.இ.டி 2010௦:

முன்னணி நுழைவுத் தேர்வுகளிலேயே, 180௦ நிமிடங்களை(3 மணிநேரம்) தேர்வு நேரமாகக் கொண்டு, நீளமான தேர்வாக இது திகழ்கிறது. கடந்த வருட ஜே.எம்.இ.டி தேர்வில் பெரிய மாறுதல்கள் இல்லை. 120௦ கேள்விகள், எதிர் மதிப்பெண்கள், பிரிவு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் போன்ற விவரங்கள், தேர்வுக்கு சற்று முன்னர்தான் தெரிவிக்கப்பட்டன(கடந்தாண்டு). இதில் 2 வகையான கட்-ஆப் மதிப்பெண்கள் உண்டு. இது, பிரிவு வாரியாக கட்-ஆப் தெரிய அனைவருக்கும் தர மதிப்பீடுகளை தருகிறது. ஆனால் இப்படி தர மதிப்பீடுகளை பெறும் பெரும்பாலான மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து அழைப்புகளை பெறுவதில்லை. மேம்பட்ட அளவில் தர மதிப்பீடுகளை பெற்றவர்கள் மட்டுமே, ஐ.ஐ.டி -களிலிருந்து மேலாண்மை படிப்புகளுக்கான அழைப்பை பெறுகின்றனர்.

என்.எம்.ஏ.டி 2010௦:

புகழ்பெற்ற என்.எம்.ஐ.எம்.எஸ் -களில் சேர்வதற்காக நடத்தப்படும் இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவது இது முதல்முறை. கேள்விகளின் எண்ணிக்கை 150௦ -இலிருந்து 120௦ -ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 3 தடவை வரை எழுதலாம்.

எஸ்.என்.ஏ.பி 2009:

மேலாண்மை படிப்புகளுக்கான தேர்வுகளில் இது மிகவும் பெயர்பெற்ற ஒரு முக்கியமான தேர்வாகும். இதில் கேட்கப்படும் கேள்விகள் கடந்தாண்டு 135 -இலிருந்து 150௦ -ஆக அதிகரிக்கப்பட்டன. 2008 -ஆம் ஆண்டு தேர்வைவிட 2009 -இல் கேள்வி மதிப்பெண் அம்சங்களில் சில மாற்றங்கள் இருந்தன. பிரிவு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் பற்றி தெளிவான வரையறை இல்லாத தேர்வு இது. ஆனால் மாணவர்கள் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அது, ” ஒரு கல்வி நிறுவனம் பிரிவு வாரியான அல்லது மொத்தமான கட்-ஆப் மதிப்பெண்களைப் பற்றி தெளிவாக தெரிவிக்கவில்லை எனில், அந்நிறுவனம் அந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்று அர்த்தமல்ல” என்பதுதான்.

எக்ஸ்.ஏ.டி 2010௦:

புகழ்வாய்ந்த வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கு இந்த தேர்வு உதவுகிறது. மேலும் மாணவர்களின் எழுதும் திறனையும் மதிப்பிடுகிறது. இதில் நெகடிவ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. இந்த தேர்வு மாணவர்களின் எழுத்து திறனை மட்டுமின்றி, அவர்களின் சிந்தித்தல் மற்றும் பகுப்பாய்வு திறனையும் சோதிக்கக்கூடிய கடினமான ஒன்றாக இருக்கிறது. எனவே இத்தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாரானால்தான் தேற முடியும். இத்தேர்வானது கேட் தேர்வுக்கு அடுத்து முக்கியமான ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *