விஜயவாடாவில் இன்று ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம் தொடங்கினார்; 1 லட்சம் தொண்டர்கள் திரண்டனர்

posted in: மற்றவை | 0

ஆந்திராவில் விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் வழங்க கோரி ஜெகன்மோகன் ரெட்டி 48 மணி நேரம் விஜயவாடாவில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.


இதன்படி அவர் ஐதராபாத்தில் இருந்து பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு இன்று காலை விஜயவாடா வந்து சேர்ந்தார்.

அவருக்கு விஜயவாடா ரெயில் நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள கனக துர்கா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் உடன் சென்றனர்.

அதன் பிறகு அவர் கிருஷ்ணா நதியோரத்தில் உள்ள சீதம்மா பாதம் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த உண்ணாவிரத மேடைக்கு வந்து அமர்ந்தார். அவருடன் களமிரங்கிய எம்.எல்.ஏ. குருநாத ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந் திருந்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதத்தில் பங்கேற்க விஜயவாடா நகரின் சுற்றுப்புற பகுதிக ளில் இருந்து விவசாயிகள், தொண்டர்கள் என சுமார் 1 லட்சம் பேர் அங்கு திரண்டனர்.

தொண்டர்கள் வேன், பஸ், கார்களில் வந்தனர். விவசாயிகள் டிராக்டர்களில் வந்தனர். விஜயவாடா நகருக்குள் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் திணறினார்கள்.

ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதத்தில் நடிகர் ராஜசேகர், நடிகை ஜிவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *