இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட “காவ்ரி ஹாட்எப்-5′ ஏவுகணை, 1,300 கி.மீ., தூரம் பாய்ந்து சென்று, இலக்கை தாக்கும் ஆற்றல் உடையது.
மேலும், வழக்கமான போர் ஆயுதங்களோடு, அணு ஆயுதங்களையும் இந்த ஏவுகணை சுமந்து செல்லும் திறன் உடையது. நேற்று இந்த ஏவுகணையை விண்ணில் ஏவி பாக்., பரிசோதித்தது. ஆனால், எங்கிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இது குறித்து பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுப் ரசா கிலானியும் பாக்., ராணுவத்துக்கு பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர். இந்தாண்டு மே மாதத்தில், ஏற்கனவே இரண்டு அணு ஆயுத ஏவுகணைகளை பாக்., பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply