லண்டன் : தான் எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பதிப்பித்து
வெளியிட, பதிப்பகங்களுடன் ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார், “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும், “சண்டே டைம்ஸ்’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் மூலம் கிடைக்கும் பணத்தை, என் மீது சுவீடன் பெண்கள் தொடுத்துள்ள வழக்கிலிருந்து விடுபட செலவிடுவேன். இந்தப் புத்தகத்தை எழுத நான் விரும்பவில்லை. ஆனாலும், செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.ஏற்கனவே சுவீடன் பெண்கள் தொடர்ந்த வழக்குக்கு, நான் ஒன்றரை கோடி ரூபாய் செலவழித்து விட்டேன். என்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், “விக்கிலீக்ஸ்’ நிறுவனத்தை தொடர்ந்து நடத்தவும் பணம் தேவைப்படுகிறது.நான் எழுதிய புத்தகத்திற்காக, அமெரிக்க பதிப்பாளர் அல்ப்ரட் நாப் என்பவரிடம் இருந்து மூன்று கோடியே 84 ஆயிரம் ரூபாயும், பிரிட்டன் பதிப்பகமான கனோன்கேட்டிடம் இருந்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாயும் எனக்கு கிடைக்கும். பிற சந்தைகளில் இருந்து 80 லட்ச ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
Leave a Reply