துபாய்: வளைகுடாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்தான் இந்த ஆண்டு எக்கச்சக்க வருமானம் பார்த்துள்ளன. 2010-ம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்த வருமானம் 1.1 ட்ரில்லியன் டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத உச்சகட்ட வருமானம் இது. எண்ணெய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாலும், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும் இந்தளவு வருவாய் பெருகியுள்ளது.
இந்த வருவாயின் அடிப்படையைக் கொண்டு எமிரேட்ஸ் தொழில் வங்கியின் தயாரித்துள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் 2010 ஆண்டு வளர்ச்சி 5.4 சதவீதம் என்றும், 2011-ல் இது 6.6 சதவீதமாக இருக்கும் கூறப்பட்டுள்ளது.
இப்போதைய போக்கின்படி பார்த்தால், வரும் 2011-ல் 1.15 ட்ரில்லியன் டாலர் அளவு வருமானம் குவிக்கும் இந்த வளைகுடா நாடுகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 40 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளன வளைகுடா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Leave a Reply