புதுடில்லி : போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையை துவக்க முடிவு செய்துள்ளது.
நாளமில்லா சுரப்பிகள் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனையையும் துவக்கயிருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. பாஸ்ட் புட் காலத்தில் பல்வேறு உபாதைகளும் மக்களை இலவசமாக தொற்றிக் கொள்கிறது. தரமான சிகிச்சையைப் பெற நம்பகமான மருத்துவமனைகளை மக்கள் தேடுகின்றனர். மக்களின் இந்த தேவைக்கேற்பவே ஸ்பெசாலிட்டி சென்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறுநீரகம், கண்பார்வை, நரம்பியல், இதய நோய் சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவுகளும் விரைவில் துவக்கயிருப்பதாக செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
Leave a Reply