100 நாட்களில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியிடப்படும்-சிபல்

டெல்லி: இன்னும் 100 நாட்களில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை வெளியிடப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ராசா அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறையை சரி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் சிபல். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரிப்பேராகியுள்ள தொலைத் தொடர்புத்துறையை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது முக்கியமான ஒரு நடவடிக்கையில் சிபல் தீவிரமாக உள்ளார். அது தொலைத் தொடர்புத்துறை கொள்கை.

இதுகுறித்து சிபல் கூறுகையில், புதிய, விரிவான தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை இன்னும் 100 நாட்களில் வெளியிடப்படும். இதில் தெளிவான, ஒளிவமறைவற்ற விதிமுறைகள் இடம் பெறும்.

நெட்வொர்க் டைம் புரோட்டோகால் (தொலைத் தொடர்புக் கொள்கை) உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஓடி விட்டன. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் வந்து விட்டன. எனவே அடுத்த 100 நாட்களில் இதை விரிவுபடுத்திய கொள்கையை வெளியிடவுள்ளோம்.

என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்பது இப்போது தெரிவிக்கப்பட முடியாது. இருப்பினும் அனைத்து விதிமுறைகளும் ஒளிவுமறைவற்றதாக இருக்கும் வகையில் புதிய கொள்கை இருக்கும்.

உரிமம் வழங்குவது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, கட்டண நிர்ணயம், ஸ்பெக்ட்ரம் பங்கீடு, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தும் தெளிவான முறையில் இனி
மேற்கொள்ளப்படும்.

தபால் துறையை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் இதில் இடம் பெறும். தபால் நிலையங்கள் மூலம் ஊரக மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு ஐடிபிஐ, எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டு போன்ற பர்ச்சேஸ் கார்டு வழங்கப்படும். ஒயிட் லேபல் ப்ரீ பெய்ட் கார்ட் என்று இது அழைக்கப்படும்.

சைபர் குற்றங்களைத் தடுக்க ரபுதிய கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்படவுள்ளது என்றார் சிபல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *