சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் செயற்கைக் கோளை இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணில் செலுத்தவுள்ளது.
எக்ஸ் சாட் என்று இந்த செயற்கைக் கோளுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டே இதை இஸ்ரோ செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் நான்கு மடங்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.
கடந்த மாதம் இதை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்வி காரணமாக சிங்கப்பூர் செயற்கைக் கோளை ஏவுவது தள்ளிப் போடப்பட்டது.
இந்தநிலையில் அடுத்த மாதம் இது ஏவப்படும் என்று தெரிகிறது. பிஎஸ்எல்வி மூலம் இது ஏவப்படும்.
இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் கடந்த 1993ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுவரை 17 முறை செலுத்தப்பட்டுல்ளது. இதன் மூலம் 38 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்வெளியில் விடப்பட்டுள்ளன. 2 மட்டு்மே தோல்வியைத் தழுவியது.
Leave a Reply