அமெரிக்க ஆதிக்கத்தை தடுக்கசீன போர்க்கப்பல்கள் தயார்

posted in: உலகம் | 0

பீஜிங்:சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்க, சீனா தனது கடற்படையில் இரண்டு ரோந்து கப்பல்களை நேற்று சேர்த்துள்ளது.


சீனக் கடற்பகுதியில் உள்ள சில தீவுகளின் சொந்தம் குறித்து சீனா, ஜப்பான் மற்றும் அண்டை நாடுகள் மத்தியில் பிரச்னை நிலவி வருகிறது. மேலும், ஜப்பானுக்கு உதவும் போக்கில், சீனக் கடற்பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்களின் ரோந்து அதிகரித்துள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சமாளிக்கும் வகையில், இரண்டு பெரிய ரோந்து கப்பல்களை தனது கடற்படையில் சீனா நேற்று சேர்த்துள்ளது.

மொத்தம் ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 டன் எடை தாங்கும் திறன் கொண்ட இக்கப்பல்கள், சீனக் கடற்பகுதியின் வடபகுதியில் ரோந்து வருவதற்காக பயன்படுத்தப்பட உள்ளன. இப்பகுதியின் கண்காணிப்புக்காக சீனா, 13 ரோந்து கப்பல்களை கடற்படையில் சேர்க்கத் திட்டமிட்டிருந்தது.கடந்த 2005ல் இத்தொகுப்பில் ஆறு ரோந்து கப்பல்கள் தயாரிக்கப்பட்டு கடற்படையில் சேர்க்கப்பட்டன. இந்நிலையில், அடுத்த மூன்று கப்பல்கள் தயாராகியுள்ளன. இந்தாண்டு ஜூன் மாதத்துக்குள் மீதி நான்கு கப்பல்கள் தயாராகி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *