கடற்படையில் வேலைபார்ப்பதற்கு தைரியம் மற்றும் எதிர்பாராத இயற்கை சீற்றங்களை சந்திக்கும் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்திய கடற்படைக்கு, சிறந்த கடற்படை வல்லுனர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ். ஒரு இன்ஜினியரை உருவாகுவதற்கு என்ன தகுதி, தொழில்நுட்பம் தேவையோ, அதில் நூறு சதவீத அளவுக்கு சிறந்த பயிற்சி மற்றும் கல்வியை மாணவர்களை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது. கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் இங்கு மாணவர்களின் ஒழுக்கத்துக்கும் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தின் முன்னணி “மரைன்’ கல்வி நிறுவனமாக உள்ளது. இந்திய கடல்சார் போக்குவரத்து அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. “சுப்பலட்சுமி லட்சுமிபதி பவுண்டேஷன்’ இக்கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது. “தினமலர்’ இதழின் வெளியீட்டாளர் டாக்டர் ஆர். லட்சுமிபதி இக்கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்.
இக்கல்வி நிறுவனம் தொடங்கிய சிறிது காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது. மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி மற்றும் தொடர்ந்து நூறு சதவீத வேலைவாய்ப்பு மாணவர்களுக்கு கிடைப்பது தான் இதற்கு காரணம். வேலைவாய்ப்பு வழிவகுக்காத படிப்பு “வெறுமையான அலங்காரம்’ போல ஆகி விடும். மேலும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களால் சமூகமும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு நிறுவனர் வேலைவாய்ப்பு மிக்க படிப்புகளை மட்டுமே தொடங்கியுள்ளார்.
ராஜஸ்தானின் பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பி.ஐ.டி.எஸ்.,), கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கீழ்கண்டபடிப்புகளை வழங்குகிறது.
* பி.எஸ்., ( மரைன் இன்ஜினியரிங்) 1999 லிருந்து வழங்கப்படுகிறது நான்கு வருட படிப்பு
* பி.எஸ்., ( நாட்டிகல் சயின்ஸ்) 2005 லிருந்து வழங்கப்படுகிறது நான்கு வருட படிப்பு படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பி.ஐ.டி.எஸ்., கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும். இதைத் தவிர்த்து மேலும் 2 படிப்புகள் வழங்கப்படுகின்றன.
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2009 லிருந்து வழங்கப்படுகிறது ஒரு வருட படிப்பு இப்படிப்பு கடற்படை துறையிடம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
* சிப்ஸ் எலக்ட்ரிகல் ஆபிசர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ் 2009 லிருந்து வழங்கப்படுகிறது ஒரு வருட படிப்பு நார்வேயில் உள்ள டெட் நார்ஸ்க் பெரிட்டஸ் நிறுவனத்திடம் அங்கீகாரம் பெற்ற படிப்பு.
வேலைவாய்ப்புகள்
கப்பல் மாலுமிகள் திடீரென கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் மற்றும் சவால்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதற்கு தேவையான நுட்பங்களை பற்றி பி.எஸ்.,(மரைன் இன்ஜினியரிங்) படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. கப்பல் நிறுவனங்கள் ஆர்.எல். ஐ.என்.எஸ்., நிறுவனத்துக்கு பயிற்சிபெறுபவர்களை, வேலைக்கு தேர்வு செய்வதற்காக ஆண்டு தோறும் வருகின்றனர்.
கப்பல் இன்ஜினியர்கள் மற்றும் கப்பல் அலுவலர்கள் போன்றவர்களை தேர்வு செய்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முழு பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களிலிருந்து வரும் மாணவர்கள்.
இவர்களையும் சிறந்த கப்பல் வல்லுனர்களாக உருவாக்குகின்றனர். இதன் மூலம் இக்கல்வி நிறுவனத்தின் பயிற்சி முறையை எளிதாக அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களும், தங்களுடைய பகுதிக்கு பெருமை சேர்க்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும்
சம்பளமும் அதிகம்.
விடுதி வசதிகள்
இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விடுதியிலேயே தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இது கட்டாயம். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி அறைகள் வழங்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் படிப்பதற்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
ஒவ்வொரு மாடிக்கும் ஒரு அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் ராணுவ வீரர்கள். இதனால் இவர்களிடமிருந்து மாணவர்கள் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளலாம்.
யூனிபார்ம் தூய்மையாக வைத்திருப்பது, நேரம் தவறாமை, கவனம் உள்ளிட்ட மாலுமிக்கு தேவையான ஒழுக்கங்களை தெரிந்து கொள்ளலாம். கப்பலில் மேற்கொள்ள வேண்டிய பணிகளிலிருந்து கவனச்சிதறல்கள் ஏற்படாமல் இருப்பதற்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு சிறந்த உணவு வழங்கப்படுகிறது. மிஷின்கள் மற்றும் ஆட்கள் சரியான அளவில் பயன்படுத்தப் படுகிறார்கள். உதாரணத்துக்கு இங்குள்ள சப்பாத்தி மிஷின் மூலம் ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் சப்பாத்திகளை தயாரித்து விடலாம். காய்கறிகள் வெட்டுவதற்கும், அதன் தோல்களை உறிப்பதற்கும் மிஷின்கள் உள்ளன. அனைத்தும் போதிய இடவசதியில் உள்ளன. சத்தான மற்றும் வெரைட்டியான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதர வசதிகள்
* உடற்பயிற்சி கூடம் அனைத்து விதமான உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி மையம் இங்கு உள்ளது. அனுபவமிக்க உடற்பயிற்சி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு உடற்பயிற்சி முறைகள் கற்றுத்தரப்படுகின்றன.
நீச்சல் குளம் பாதி ஒலிம்பிக் நீச்சல் குளம் போல, இங்குள்ள நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சியாளர்களை கொண்டு நீச்சல் நுணுக்கங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. இவ்விதமான நீச்சல்குளம் மதுரையில் உள்ள எந்த ஒரு நிறுவனத்திலும் இல்லை.
இணையதளம்
நவீன இணையதள மையம் இந்நிறுவனத்தில் உள்ளது. காலை 8 மணியிலிருந்து, இரவு 8 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். தகுதியான லேப் டெக்னீசியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வினாடிக்கு “6எம்பி’ வேகத்தில் இணையதள இணைப்பு உள்ளது. கப்பல் கல்லூரி வளாகத்திலேயே மாதிரி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் டி.எஸ்.மீனாட்சி. கப்பலில் உள்ள தொழில்நுட்பங்களை மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அறிந்து கொள்வதற்கு வசதியாக இது உருவாக்கப் பட்டுள்ளது.
இம்மாதிரியான விஷயங்களால் தான் மற்ற மரைன் கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்.எல்.ஐ.என்.எஸ்., உயர்ந்து நிற்கிறது. வீடியோ கான்பரன்சிங் மாணவர்கள் மரைன் துறையில் ஒவ்வொரு நாளும் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கற்றுக்கொள்ள முடிகிறது. சென்னையில் வீடியோ கான்பரன்சிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கென இத்துறையில் அனுபவமிக்க பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக கப்பல் துறையில் சிறந்து விளங்கும் சீனியர் கேப்டன்கள் மற்றும் இன்ஜினியர்கள் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்கள் பாடம் எடுக்கின்றனர்.
இது இரு வழி இணைப்பு. வேகம் 2எம்பிபிஸ். இந்த டெக்னாலஜியின் மூலம் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் முதல் கடல்சார் கல்வி நிறுவனம் தான் ஆர்.எல். ஐ.என்.எஸ்., முதல்வர் மற்றும் துணைமுதல்வர் இக்கல்வி நிறுவனத்தின் முதல்வராக இருப்பவர் எம்.சுப்ரமணியன்.
இவர் கடல்சார் துறையில் தலைமை இன்ஜினியராக 30 வருடத்துக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கல்லூரியின் துணை முதல்வராக இருப்பவர் சுபெந்து ஹாதி. இவர் இத்துறையில் கேப்டனாக 20 வருடத்துக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
Leave a Reply