சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க இருக்கிறோம். அப்போது கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
ஜெயலலிதா ஏற்கனவே தொலைபேசியில் எங்களைத் தொடர்பு கொண்டு தமிழக தேர்தல் கூட்டணி பற்றி பேச வர வேண்டும் என்று கோரியுள்ளார்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல்க் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலப்படுத்துதல் குறித்து வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும் பொலிட்பீரோ கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார் காரத்.
Leave a Reply