டெல்லி: இந்திய தொழில்துறை வளர்ச்சியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இந்த நிதி ஆண்டு அதே காலகட்டத்தில் வெறும் 2.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக நுகர்வோர் பொருள் உற்பத்தித் துறையில் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதே ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் 11.29 சதவீதமாக தொழில்துறை வளர்ச்சி இருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் படுபாதாளத்தை நோக்கிப் போயிருப்பது தொழில் துறையினரை அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.
இந்திய தொழில்துறை குறியீட்டெண் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள் கவலையளிப்பாதக உள்ளது என்றும், இதைச் சரி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி [^] கூறியுள்ளார்.
இந்த மோசமான நிலைக்கு காரணம், குறுகிய ஆயுள் கொண்ட நுகர் பொருள்கள் உற்பத்தி எதிர்மறையாகப் போய்விட்டதுதான் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், உற்பத்தித் துறை இப்படி வீழ்ச்சியை நோக்கிப் போவது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
“இன்றைக்கு உடனடியாக அரசு [^] செய்ய வேண்டியது, பணவீக்கத்துக்கு ஒரு ஸ்பீட்பிரேக்கரை உண்டாக்குவதுதான். கூடவே குறுகிய கால நுகர்பொருள்களான உணவு, அன்றாட அத்தியாவசியப் பண்டங்களின் உற்பத்தியை கணிசமாக பெருக்க வேண்டும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே தொழில் வளர்ச்சி சீராகும்”, என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply