சென்னை: தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 2009-10-ல் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அளித்துள்ள பதிலில், “தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 2008-09-ல் ரூ 445 கோடியாக இருந்தது. அது 2009-2010-ல் ரூ 908.70 கோடியாக அதிகரித்துள்ளது.
திமுக அரசு வந்த பிறகுதான் பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் அமைந்தன. விரைவில் சேலம் அம்மாபாளையம் சிறப்புப் பொருளாதார மண்டலம் இயங்கத் தொடங்கும். இதற்கான உள்கட்டமைப்புப் பணி ரூ 10 கோடி செலவில் நடந்து வருகிறது.
அடுத்து வேலூரில் இரு பெரும் தொழிற்சாலைகள் அமையவிருக்கின்றன” என்றார்.
Leave a Reply