புதுடில்லி : இமாச்சலபிரதேசம் சோலன் பகுதியில் இருக்கும் காளான் ஆராய்ச்சி இயக்குநரகம் ஒரு புதிய வகை காளானை கண்டுபிடித்துள்ளது.
மங்கி ஹெட் காளான் என பெயரிடப்பட்டுள்ள இந்தக் காளான் , கேன்சரை தடுக்கும் சக்தியை கொண்டுள்ளது. இந்தக் காளானின் மருத்துவ தன்மை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டப் பிறகு , இவற்றை வர்த்தக ரீதியாக புழக்கத்தில் விட திட்டமிட்டிருந்தாக காளான் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் இயக்குநர் மஜ்னித் சி்ங் தெரிவித்தார். இந்தியாவில் 600 மில்லியன் டன் விவசாய கழிவுகள் சேர்வதாகவும், அவற்றை முறையாக பயன்படுத்தி பல அரிய வகை காளான்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply