பிஜாப்பூர் : கொரிய இரும்பு நிறுவனமான போஸ்கோ கர்நாடக மாநிலத்தில் புதிய இரும்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சுமார் ரூ.32 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த இரும்பு ஆலையில் இருந்து ஆண்டுக்கு சுமார் 6 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த இரும்பு ஆலையை ஒரிசாவில் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் இரும்பு ஆலையை கர்நாடகாவில் அமைக்க திட்டமிட்டதாகவும் கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார். இந்த ஆலை அமைப்பதற்காக கர்நாடக தொழிற்துறை வளர்ச்சி கழகத்தின் சார்பில் ரூ.60 கோடி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply