காட்டிக்கொடுக்கும் விக்கிலீக்ஸின் இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று ரஷ்ய அதிபர் டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளமானது ஈராக், ஆப்கான் ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின், போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் சர்வதேச அளவில் பிரபலமானார்.
இந்நிலையில் சுவி்ட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் டிமெட்ரிமித்வடே கூறியதாவது: விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களால் சில நாடுகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
ஆனால் விக்கிலீக்ஸினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இது சர்வதேச அளவில் பொது அரசியல் இணையதளமாக உள்ளது. இன்று பலகோடி மக்கள் இணையதளத்தினை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் விக்கிலீக்ஸ் சர்வதேச நாடுகளிடையேயான உறவில் நல்ல செல்வாக்கினை பெருக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
Leave a Reply