புதுடில்லி:வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில், (பிக்சட்டெபாசிட்) முதலீடு செய்துள்ளவர்கள், முதிர்வுகாலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால்,அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையை வங்கிகள் உடனடியாக அமலுக்குகொண்டு வந்துள்ளன.முதலீட்டு பணத்தில் ஒரு சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். வங்கிகளில் நிரந்தரவைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள், தவிர்க்க முடியாத காரணங்களால்முதிர்வு காலத்திற்கு முன்பாக பணத்தை எடுக்கவிரும்பினால், அதற்கு அபராத விதிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கிகள் முடிவுக்கே விட்டது. ஒருகுறிப்பிட்ட தொகையை அபராதம் விதிக்கும் நடைமுறையை, சில பொதுத்துறை வங்கிகள் நடைமுறைப்படுத்தியிருந்தன. ஆனால், சில தனியார் வங்கிகள், இந்த நடைமுறையை பின்பற்றாமல் இருந்தன. இந்நிலையில், எச்.டி.எப்.சி., வங்கி உட்படகடந்த 24ம் தேதி முதல் நிரந்தர வைப்பு நிதி திட்டத்திற்கு,ஒரு சதவீதம் அபராதம் விதிக்கும் தொகையைஅமல்படுத்தியுள்ளது.இதே போல், கர்நாடகா வங்கி, தனலட்சுமி வங்கிஆகியவை ஒரு சதவீத அபராத தொகையை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் ஐ.ஓ.பி., வங்கி, ஐந்துலட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு அபராதம் விதிப்பதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஐந்துலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை முதிர்வு காலம்முடிவதற்கு முன் எடுத்தால் அபராதம் விதிக்க உள்ளது.
Leave a Reply