ராஜபக்சேவுக்கு புற்று நோய்?

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை புற்று நோய் தாக்கியிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து எந்த மறுப்பும் உறுதிப்படுத்தலும் இல்லை.

ராஜபக்சே கடந்த சில மாதங்களாவே சுகவீனமுற்றிருப்பதாகவும், கல்லீரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வாறான நிலையில் அவரைக் காண்பவர்கள் அவர் குடித்துவிட்டிருப்பதாக கருதிக் கொள்வதாகவும் விளக்கம் அளித்தார் அந்த அதிகாரி.

தன் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காகவே சமீபத்தில் அவர் அமெரிக்காவுக்குப் போனதாகவும் நம்பகமாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் எம் டி ஆண்டர்சன் கேன்சர் மையத்தில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது, முன்பை விட அதிக அளவில் வைத்தியர்கள் அதிபர் மாளிக்கைக்கே வந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரம், மகிந்தவின் வெளிநாட்டுப் பயணங்களில் தமிழர் இடையூறு செய்யக் கூடாது என்பதற்காகவே இப்படியொரு செய்தி பரப்பப்படுவதாக தமிழ் இணையதளங்கள் சில சந்தேகம் எழுப்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *