கொல்கத்தாவில் விமானத்துக்கு கீழே நின்ற பெட்ரோல் லாரியில் தீ பிடித்தது: 268 பயணிகள் உயிர் தப்பினர்

posted in: மற்றவை | 0

11_009சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு கொல்கத்தா வந்த விமானத்திற்கு கீழே நின்ற பெட்ரோல் லாரியில் தீப்பிடித்துள்ளது.


விமானத்தில் 268 பயணிகள் இருந்தனர். விமானம் வந்து நின்றதும் அதில் இருந்து பயணிகள் இறங்க தொடங்கினார்கள்.

அதே நேரத்தில் பெட்ரோல் லாரி அங்கு வந்து விமானத்துக்கு பெட்ரோல் நிரப்பியது. இந்த லாரி விமானத்தின் வாள் பகுதிக்கு கீழே நின்றபடி பெட்ரோலை நிரப்பியது. அப்போது பெட்ரோல் லாரியில் திடீரென தீப்பிடித்தது.

உடனே லாரி டிரைவர் அவசரமாக லாரியை அங்கிருந்து ஓட்டி சென்று சற்று தூரத்தில் நிறுத்தினார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து லாரியில் பிடித்த தீயை அணைத்தனர்.

இதனால் விமானம் தீப்பிடிப்பதில் இருந்து தப்பியது. பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *