குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிப்பது மற்றும் ஒரு வருடம் வரை சிறையில் அடைப்பது என்ற வகையில், மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

சாலை விபத்துகளை குறைப்பது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை முன்னாள் செயலர் சுந்தர் தலைமையிலான நிபுணர் குழு, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜோஷியிடம், 411 பக்கத்திலான, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரின் உடலில், 100 மில்லி ரத்தத்தில் 150 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையுடன், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அதுவே, போதையில் உள்ளவரது 100 மில்லி ரத்தத்தில் 30 முதல் 10 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 5,000 அபராதமோ அல்லது ஆறு மாதம் சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கலாம்.வாகனத்தில் சென்றவாரே மொபைல் போனில் பேசும் நபர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதுபோல், சிக்னலை மதிக்காமல் செல்லும் நபர்கள், அவரவர் லேனில் செல்லாமல் மாறி மாறி செல்லும் நபர்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *