கோல்கட்டா : ஐ.பி.எல்., தொடரில் நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்த கங்குலி, உள்ளூர் போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்திய அணியின் “மாஜி’கேப்டன் கங்குலி (38 வயது). கடந்த 2003ல் இந்திய அணியை உலக கோப்பை பைனல் வரை அழைத்துச் சென்றார். பின் 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், 113 டெஸ்ட் (7212 ரன், 16 சதம், 35 அரைசதம், 32 விக்.,) மற்றும் 311 ஒருநாள் (11363 ரன், 22 சதம், 72 அரைசதம், 100 விக்.,) போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐ.பி.எல்., வாய்ப்பு: அதன்பின், இந்தியாவில்நடக்கும் முதல் தர போட்டிகளில் பங்கேற்று வந்த இவர், ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடரில்,பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் “கோல்கட்டா நைட் ரைடர்ஸ்’ அணியில் இடம் பிடித்தார். இதில் 2008மற்றும் 2010ல் நடந்த தொடரில் அணியின்கேப்டனாக செயல்பட்ட இவர், பெரிய அளவில் சோபிக்கவில்லை. மூன்று ஐ.பி.எல்., தொடரில்,40 போட்டிகளில் விளையாடிய இவர், 7 அரைசதம் உட்பட 1031 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிரடி முடிவு: சமீபத்தில் பெங்களூருவில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள்ஏலத்தில், இவரை கோல்கட்டா நைட் ரைடர்ஸ் உட்பட எந்த ஒரு அணியும் தேர்வு செய்ய முன்வரவில்லை. இருப்பினும் சில நாட்களுக்கு பின், கொச்சி அணிக்காக விளையாட, அந்த அணி நிர்வாகம் இவரை அணுகியது. ஆனால் பெங்களூரு, மும்பைஉள்ளிட்ட சில அணிகளின் உரிமையாளர்கள்அனுமதி அளிக்காததால், இவரது கடைசி வாய்ப்பும் வீணானது. இதனால் நேற்று, ஐ.பி.எல்., உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பயிற்சியாளர் திட்டம்: இனி கிரிக்கெட்போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறிய கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளராகபணியாற்ற திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply