டெல்லி: போலி ஆட்டோமொபைல் உதிரி பாகங்களால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தியாளர் சங்கம்(ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இந்தியாவி்ல் ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு,உதிரிபாகங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.இதை பயன்படுத்தி பிரபல நிறுவனங்களின் பெயரிலும்,குறைந்த விலைக்கும் போலி உதிரிபாகங்கள் சந்தையி்ல் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
விலை மலிவாக கிடைப்பதால்,போலி உதிரிபாகங்களின் விற்பனை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்,போலி உதிரிபாக விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 வருவாய் இழப்பு ஏற்படுவதாக ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர் சங்கம்(ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏசிஎம்ஏ தலைவர் கூறியதாவது:
“ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை போன்று,போலி உதிரிபாகங்களின் விற்பனையும் வேகமாக அதிகரித்து வருகிறது.போலி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு போலி வாகன உதிரி பாகங்களின் விற்பனை ரூ.8,700கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால்,அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி 10லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் பறித்து விடுகிறது.
போலி உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்காக,மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்,”என்று கூறினார்.
Leave a Reply