டெல்லி: தேர்தலுக்கு முன் கொஞ்சமாவது பெட்ரோல் விலையைக் குறைத்துக் காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ.4,900 ஆக உயர்ந்து உள்ளது. ஏற்கனவே பண வீக்கம் அதிகரித்து இருப்பதாலும், பாராளுமன்ற கூட்டம் நடந்து வருவதாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை மேலும் உயர்த்த முடியாத நிலை உள்ளது.
இதனால், திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டில், கச்சா எண்ணெய்க்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத சுங்க வரி (இறக்குமதி வரி) ரத்து செய்யப்படும் என்று, பெட்ரோலிய அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
அத்துடன் டீசலுக்கான சுங்க வரி தற்போதைய 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய்க்கு சுங்கவரி குறைக்கப்படுவதன் மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பில் லிட்டருக்கு ரூ.1.48 வரை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply