மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒரிசா மாநில ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணா 8 நாட்களுக்கு பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார்.
ஒரிசா மாநிலத்தில் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் ஆர்.வி.கிருஷ்ணா. இவர், மலைப்பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட, இளநிலை பொறியாளர் பபித்ரா மோகன் மஜி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச்சென்றனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் விடுவிக்க, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பலனாக நேற்று பொறியாளர் மஜி மட்டும் மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் ஆட்சியரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை விதித்ததால் அவர் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆட்சியர் கிருஷ்ணாவை நேற்றிரவு மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளனர்.
Leave a Reply