சென்னை:ஆறு வகை மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக் குறிப்பு:மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு படி, மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கொண்ட மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ, வினியோகம் செய்யவோ உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.* 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமுசலைடு மற்றும் அது சம்பந்தமான கலவைகள்.* சிசாபிரைடு மற்றும் அது சார்ந்த கலவை.* பினைல் புரோப்பலமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.* மனித தொப்புள் கொடி நஞ்சு சாறு மற்றும் அது சார்ந்த கலவைகள்.* சிபுட்ரமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.* ஆர்.சிபுட்ரமைன் மற்றும் அது சார்ந்த கலவைகள்.இந்த ஆறு மருந்துகளை மூலப்பொருட்களாகக் கொண்ட மருந்துகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply