புதுடில்லி : முக்கிய மூல பொருள்களின் விலை உயர்வால் கார்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி நிறுவனங்கள் அடுத்த மாதத்தில் இதற்கான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு ரூ.10,000 முதல் 25,000 வரை இருக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். சாதாரண கார்களின் விலை ரூ. 10,000 வரையிலும், சொகுசு கார்களின் விலை ரூ. 25,000 வரையிலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
காஸ்ட்லி மூலப்பொருட்கள் : நடப்பு நிதி ஆண்டில், நவம்பர்-பிப்ரவரி மாத காலத்தில், உருக்கு, இயற்கை ரப்பர், அலுமினியம், தாமிரம், நிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலை 20 முதல் 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் வாகன நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் உயர்ந்தது. எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள லாப பற்றாக்குறையை ஈடுகட்ட கார்கள் விலையை உயர்த்துகின்றன.
Leave a Reply