குட்டிக்கார் என்று சொன்னால் தகும்;அந்தளவிற்கு பல்வகை பயன்பாட்டு வாகனமாக வலம் வருகிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்.
ஆண்கள்,பெண்கள் என இரு பாலருக்கும் பொருத்தமான இரு சக்கர வாகனம் எது? என்று கேட்டவுடன் கண்ணை மூடிக்கொண்டு ஆக்டிவா பக்கம் கை நீட்டிவிடலாம்.
தொழில்நுட்பம்,வடிவமைப்பு,பிக்கப்,இடவசதி என அனைத்திலும் சளைத்ததாக இல்லை ஆக்டிவா. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அனாயசமாக புகுந்து செல்லும் ஆக்டிவா, மோட்டார் சைக்கிள்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதை செயலில் காட்டுகிறது.
இந்திய பவர் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நிலையான இடம்பிடித்துள்ள அழகு பதுமை நியூ ஆக்டிவா ஸ்கூட்டரின் விபரங்கள் அடங்கிய சிறு தொகுப்பு:
எலக்ட்ரிக் ஸ்டார்ட்
எஞ்சின்: ஏர்கூல்டு,109சிசி திறன்
அதிகபட்ச திறன்:8.0BHP @ 7500RPM
டார்க்: 9 Nm @ 5500rpm
சஸ்பென்ஷன்
முன்பக்கம்:பாட்டம் லிங்குடன் கூடிய ஸ்பிரிங் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் டேம்பர்
பின்பக்கம்:யூனிட் லிங்குடன் கூடிய ஸ்பிரிங் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் டேம்பர்
பிரேக்
முன்பக்கம்: 130மிமீ டிரம்
பின்பக்கம்: 130மிமீ டிரம்
டயர்
முன்பக்கம்: 3.50 X 10 ட்யூப்லெஸ்
பின்பக்கம்: 3.50 X 10 ட்யூப்லெஸ்
வீல் பேஸ்:1238மிமீ
பேட்டரி:12V 5Ah
பெட்ரோல் டேங்க்:6லிட்டர்
வண்டியின் எடை:110கிலோ
அதிகபட்ச வேகம்:மணிக்கு 80கி.மீ
மைலேஜ்:லிட்டருக்கு 40கி.மீ(பரிந்துரையின்படி)
சென்னையில் ஆன்ரோடு விலை:ரூ.50,500(தோராய விலை)
Leave a Reply