புதுடில்லி:”பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் தொழில் கல்வியையும் கற்றுத் தரும் வகையிலான திட்டம், வரும் மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்.
எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இந்த தொழிற்கல்வி கற்றுத் தரப்படும்’ என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன், மாணவர்களுக்கு தொழில் கல்வியையும் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பில் துவங்கி, 10ம் வகுப்பு வரை, இந்த தொழில் கல்வி கற்றுத் தரப்படும். தச்சு, இசை, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சுற்றுலா, சேவைத் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில் உள்ளிட்டவை, இந்த தொழிற்கல்வியில் கற்றுத் தரப்படும்.இது தொடர்பான பாடத் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக, தொலை தொடர்புத்துறை, கட்டுமானம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். வரும் மே மாதத்துக்குள், தேசிய அளவிலான தொழிற்கல்வி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள், உயர் கல்வியை தொடர முடியாவிட்டாலும், உடனடியாக வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, இத்திட்டம் வகை செய்யும்.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
Leave a Reply