அமெரிக்காவில் டிஸ்கவரி விண் வெளி ஓடம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று இருந்தது. 12 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. அதில் 6 விண்வெளி வீரர்கள் வந்தனர்.
டிஸ்கவரி ஓடத்துக்கு இது கடைசி பயணமாகும். 27 ஆண்டுகளாக டிஸ்கவரி ஓடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. மிகவும் பழைதாகி விட்டதால் இனி இதை பயன்படுத்தாமல் அருங்காட்சியகத்தில் வைப்பது என்று முடிவு எடுத்தனர். அதன்படி டிஸ்கவரி ஓடம் இனி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.
27 ஆண்டில் “டிஸ்கவரி ஓடம் 39 தடவை விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளது. முதன் முதலில் 1984-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி விண்வெளிக்கு சென்றது. இதுவரை 246 பேரை விண்வெளிக்கு ஏற்றி சென்றுள்ளது. விண்வெளியில் மொத்தம் 365 நாட்கள் இருந்துள்ளது. 5830 தடவை பூமியை சுற்றி வந்துள்ளது. 23 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது.
Leave a Reply