சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்கள் குறித்த விவரத்தை அனைத்து வங்கிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வேட்பாளர்கள், கட்சியினர் மட்டுமல்லாது, தனி நபருக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்கள் குறித்த விவரத்தை, அனைத்து வங்கிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள், கட்சியினர் மட்டுமல்லாது, தனி நபர்களையும் இந்த விஷயத்தில் வங்கிகள் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில், பெரிய தொகைகள் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டால், அது குறித்த விவரங்களை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள வருமான வரித்துறை துணை அல்லது இணை இயக்குனருக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண நடமாட்டத்தை தடுக்க, அந்தந்த மாவட்ட எல்லைகளில், கூடுதல் கண்காணிப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றும், மொத்தமாக பணம் எடுத்து வருபவர்கள் குறித்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும், சோதனை சாவடிகள் உருவாக்கப்பட்டு, வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Leave a Reply