புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இம்மாத இறுதிக்குள், வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவன (மார்க்கெட்டிங் பிரிவு) தலைவர் ஹெச்.எஸ்.கோயிண்டி கூறியதாவது, உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாகவே, வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தற்போது, இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். டிவிஎஸ் நிறுவனம், கடந்த ஜனவரி மாதத்தில் தான் வாகனங்களின் விலையை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வர்த்தகத்தை, மீண்டும் துவக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply