புழல் சிறைக்குள் போதை மாத்திரைகளை கடத்தி வந்தபோது கைதி சிக்கினார். புழல் சிறையில் பிரபல ரவுடி வெல்டிங் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின், சிறையில் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கைதிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் சிறைக்குள் வரும் கைதிகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜதுரை (33) என்பவர், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்திவிட்டு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு புழல் சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது டிஐஜி துரைசாமி, எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான சிறை அதிகாரிகள், ராஜதுரையை சோதனையிட்டனர்.
அப்போது வலது கையில் காயம் ஏற்பட்டது போல ராஜதுரை கட்டுப் போட்டிருந்தார். அதை சோதித்த போது 100 போதை மாத்திரைகள் இருந்தன. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து ராஜதுரைக்கு ஒரு மாதத்துக்கு உறவினர்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெல்டிங் குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே சிறைக்குள் 100 போதை மாத்திரைகள் கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply