சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
‘இந்தியா மாநிலங்களில் பொருளாதார சுதந்திரம் 2011’ என்ற தலைப்பில் பிரேஸர் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதன் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியானது.
இந்த அறிக்கையில், இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரம், மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சொத்து வளம் போன்றவற்றில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் ஆந்திரப்பிரதேசமும் வருகின்றன. 2005-ல் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றிருந்த பஞ்சாப் இந்த ஆண்டு 12 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம்தான் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், பொருளாதார சுதந்திரத்தில் கடைசி இடத்தில் இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply