சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆனந்த் கூறியுள்ளார்.
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிளைக் கழக செயலாளராக இருக்கும் ஆனந்த் முத்தரையர் வகுப்பைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கம் தொகுதியில் பிராமணர்கள் அதிகம் இருந்தாலும் கூட முத்தரையர் வகுப்பினரும் கணிசமாக உள்ளனர் என்பதால் ஆனந்த்தை நிறுத்தியுள்ளது திமுக.
செளம்யா என்ற மனைவியும் அர்ஷிதா என்ற மகளும் ஆனந்த்துக்கு உள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் ஆனந்த்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை தோற்கடித்து வெற்றியை முதல்வர் காலடியில் சமர்ப்பிப்பேன் என்றார்.
Leave a Reply