புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக, லைவ் டிவி சேவையை ரூ. 99க்கு தர திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது எல்லா வீடுகளிலும் இண்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தற்போது, வீடுகளில் கம்ப்யூட்டர் அத்தியாவசியப் பொருளாகவே மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள், அதில் டிவி நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு, தங்கள் நிறுவனம் லைவ் டிவியை சேவைறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளபடியால், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நற்சேவை செய்யும் விதமாக, ரூ. 99 கட்டணத்தில், லைவ் டிவி சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ரூ. 99 கட்டணத்தில் யூடிவி பிண்டாஸ், யூடிவி மூவிஸ், புளூம்பெர்க் யூடிவி, டிஎல்சி, அனிமல் பிளானட், அனைத்து டிஸ்கவரி சேனல்கள், சாக்ஷி டிவி, லைவ் இந்தியா மற்றும் தரங் மியூசிக் உள்ளிட்ட 28 சேனல்களை இதன்மூலம் கண்டுகளிக்கலாம். மேலும் இதோடு, வீடியா ஆன் டிமாண்ட் மற்றும் மூவீஸ் சேனல்களையும் சேர்க்கும் எண்ணம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply