டெல்லி: வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ. 1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அடுத்த மாதம் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதி்ல் ஊதியதாரர்கள், நடுத்தரப் பிரிவு மக்கள் பயன் பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இப்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உள்ளது. இதை ரூ. 1.8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக இது ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், இதனால் அதிக வருமான இழப்பு ஏற்படும் என்பதால் ரூ. 1.8 லட்சமாக மட்டுமே உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply