அதிக விடைத்தாள்களை ஒரே நாளில் ஆசிரியர்கள் திருத்தும் சூழல் உள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் சிக்கலில் உள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையத்தில், அதிக விடைத்தாள்களை திருத்தம் செய்ய நெருக்கடி செய்வதால், திருத்தும் பணியில் தவறுகள் ஏற்பட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 20ம் தேதிக்கு பின் துவங்க உள்ளன. நாள் ஒன்றுக்கு 15 விடைத்தாள்கள் மட்டுமே ஆசிரியர்கள் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால் விடைத்தாள் திருத்தும் பணியை விரைந்து முடிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு அதிகளவில் விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதுதொடர்பாக, 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபற்றி, தமிழாசிரியர் கழக மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது, “விடைத்தாள் திருத்தும் மைய முகாம் அலுவலர்கள், விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியில் அரசுக்கு செலவினத்தை குறைக்கவே அதிகமான விடைத்தாள்கள் திருத்தம் செய்ய வற்புறுத்துகின்றனர். அதேசமயம் ஒரு நாளுக்கு 15 விடைத்தாள் மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.
Leave a Reply