டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் நேற்றிரவு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு அலைகள் ஏற்படாததால் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஃபுகுஷிமாவிற்கு வடக்கே பசிபிக் கடலில் 45 கி.மீ. ஆழதத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம், அதையடுத்து ஏற்பட்ட சுனாமி தாக்கியதன் விளைவாக ஃபுகுஷிமா அணு மின் நிலையம் செயலிழந்து, அதிலிருந்து அணுக் கதிர் வீச்சு பரவி வருகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வுகளில் கட்டடங்கள் இடிந்து 3 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலடுக்கத்தின் எதிரொலி இன்று ஜப்பான் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. ஜப்பான் பங்குச் சந்தை இன்று பெரும் சரிடவுடனேயே துவங்கியது.
Leave a Reply