தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்

posted in: மற்றவை | 0

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.


நாளை தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வரும் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரும் 14-ம் தேதி வரை தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் மின்தடை மற்றும் அது தொடர்புடைய புகார்களை பொறுப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

பொறுப்பு அதிகாரிகளின் பெயர்களும், செல்போன் எண்களும் வருமாறு,

தண்டையார்பேட்டை வடக்கு தண்டையார்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள், வியாசர்பாடி, பெரம்பூர், பொன்னேரி செயற்பொறியாளர் பி.வி.ஜெகதீஷ் (9445850889)

மத்திய தியாகராயநகர் தியாகராயநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், எழும்பூர், அண்ணாசாலை, மைலாப்பூர் செயற்பொறியாளர் ஆர்.கார்த்திகேயன் (9445850727)

மேற்கு மின்பகிர்மான வட்டம் அண்ணாநகரைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆவடி, அம்பத்தூர் செயற்பொறியாளர் என்.கண்ணன் (9445850400)

தாம்பரம் தெற்கு ராஜீவ்காந்தி சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள், கே.கே.நகர், அடையாறு, தாம்பரம், கிண்டி, போரூர் செயற்பொறியாளர் சி.கே. செல்லையா (9445850227)

செங்கல்பட்டு செங்கல்பட்டைச் சுற்றியுள்ள பகுதிகள், மறைமலை நகர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் செயற்பொறியாளர் கே.முத்து (9445850200)

கொரட்டூர் (மின்வினியோக இணைப்புகள்) செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் செயற்பொறியாளர் ராமச்சந்திரன் (9445850404)

சிங்கம்பெருமாள்கோவில் (மின்வினியோக இணைப்புகள்) செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் செயற்பொறியாளர் ஜெயபால் (9445850200)

மின்வினியோகம் தொடர்பான புகார்கள் செயற்பொறியாளர் எஸ்.வெங்கடாச்சலம் (9445850802). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *