புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் இயக்குனர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட 100 சதவீத கூடுதல் சம்பளத்தை ஆடிட்டர்களுக்கு கொடுக்கிறது. 2007 – 08 ல் ஸ்டேட் பாங்க்கின் சேர்மன் ஓ.பி.பாத் பெற்ற சம்பளம் மற்றும் ஊக்க தொகை ரூ.16.2 லட்சம். அது 2008 – 09 ல் ரூ.20 லட்சமாக <<உயர்த்தப்பட்டது.
வங்கியின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இந்த விபரம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வங்கியின் மார்ச் 31, 2009 உடன் முடிந்த நிதி ஆண்டுக்கான லாப நஷ்ட கணக்கில், இயக்குனர்களின் சம்பளம், படிகள் மற்றும் செலவுக்காக ரூ.99.81 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நேரம் ஸ்டேட் பேங்க் கிளைகளில் இருக்கும் ஆடிட்டர்கள் உள்பட மற்ற ஆடிட்டர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்திருக்கும் சம்பளம் மற்றும் செலவு தொகை ரூ.103.7 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ( 2007 – 08 ல் ) ரூ.97.3 கோடியாக இருந்தது. அப்போது இயக்குனர்களுக்கான சம்பளம் மற்றும் செலவு ரூ.1.2 கோடியாக இருந்தது.
Leave a Reply