ஆர்பாட்டக்காரர்கள் பலர் கருப்பு உடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றார்கள்.
முன்னைய ஆர்பாட்டங்களில் கலந்துகொண்டு உயிரிழந்தவர் களுக்கு இன்றையதினம் அஞ்சலி தினமாக கருதவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அதிபர் பதவி வேட்பாளர் மிர் ஹொ சைன் முசவி அவர்கள், இன்றைய ஆர்பாட்டக்காரர்கள் மத்தி யில் உரையாற்றியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அஹ்மதிநிஜாத் அவர்கள் வெற்றி பெற்றது மோசடி என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
இந்த ஆர்பாட்டங்களுக்கு நேரடியாக சென்று செய்தி சேகரிப் பதற்கு பிபிசி செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, இந்த ஆர்பாட்டக்காரர்களோடு தொடர்பிருந்ததான குற்றச்சாட்டின்பேரில், இரானின் முன்னாள் அதிபர் ரப்சஞ்சானி யின் மகளும் மகனும் இரானை விட்டு வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, இரானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
Leave a Reply