மும்பை: பவுடர் வடிவில் உள்ள குளிர்பானங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கோககோலா நிறுவனம் புதிய குளிர்பானத்தை ரூ 5-க்கு அறிமுகப்படுத்துகிறது.
பவுடர் வடிவிலான குளிர்பானங்களுக்கு இந்தியாவில் ரூ 300 கோடி அளவுக்கு மார்க்கெட் உள்ளது.
இதில் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன்னாகத் திகழ்வது ரஸ்னாதான். இந்த நிறுவனத்துக்குப் போட்டியாக, 2001-ம் ஆண்டு சன்பில் என்ற புதிய பானத்தை அறிமுகப்படுத்தியது கோககோலா. ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதை நிறுத்திவிட்டது. காரணம் இந்த பிராண்ட் போதிய வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.
இந்த நிலையில் சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு புதிய பிராண்டை களத்தில் இறக்குகிறது கோககோலா. பான்டா ருசியில் வரவிருக்கும் இந்த பவுடர் பானத்துக்கு ‘பான்டா பன் டைம்’ என பெயரிட்டுள்ளனர்.
ரூ 5 விலை கொண்ட இந்த பவுடர் பானம், நடுத்தர மற்றும் ஏழை மக்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்பு சன்பில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட தவறுகள் நேராமல் இந்த புதிய பிராண்டை மார்க்கெட் செய்வதற்கான தீவிர வேலைகளில் இறங்கியுள்ளது கோக கோலா நிறுவனம்.
Leave a Reply