திருப்பூரில் வசந்தம், கோடை கால பின்னலாடை கண்காட்சி துவக்கம்

திருப்பூர் : திருப்பூர் அருகே 32வது வசந்தம் மற்றும் கோடை கால பின்னலாடை கண்காட்சி (2012 ம் ஆண்டுக்கான) நேற்று துவங்கியது;


பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்று, ஆடைகளை பார்வையிட்டனர். பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், தலைமை வகித்தார். ஸ்டேட் பாங்க் பொது மேலாளர் (நெட் ஒர்க்-2) பிரசாத், கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட அரங்குகளில், திருப்பூர், பெங்களூரு, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, பிரபல பின்னலாடை நிறுவனங்கள், அடுத்தாண்டு வசந்த மற்றும் கோடை காலத்தில் அணிவதற்கு ஏற்ற மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடைகளை காட்சிக்கு வைத்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *