மொகாலி: ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடர்கிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. ராஜஸ்தான் அணி மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்ன் “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், பால் வல்தாட்டி இணைந்து மீண்டும் ஒரு முறை அதிரடி துவக்கம் தந்தனர். திரிவேதி வீசிய முதல் ஓவரில் கில்கிறிஸ்ட் 2 பவுண்டரி அடித்தார். இவரது அடுத்த ஓவரில் வல்தாட்டி தன் பங்குக்கு 3 பவுண்டரி, 2 சிக்சர் சேர்த்து மொத்தமாக 25 ரன்களை அள்ளினார். வார்ன் சுழலில் கில்கிறிஸ்ட் ஒரு இமாலய சிக்சர், பவுண்டரி அடித்து, பஞ்சாப் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றார். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், வாட்சன் பந்தில் கில்கிறிஸ்ட்(28) அவுட்டானார். சிறிது நேரத்தில் வார்ன் வலையில் வல்தாட்டி(46) சிக்கினார்.
மார்ஷ் அரைசதம்:
பின் ஷான் மார்ஷ், தினேஷ் கார்த்திக் சேர்ந்து அசத்தினர். வார்ன் ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய மார்ஷ், ரன் மழை பொழிந்தார். மறுபக்கம் திரிவேதி ஓவரில் கார்த்திக் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடிக்க, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. டெய்ட் வேகத்தில் கார்த்திக்(21) வெளியேறினார். அபிஷேக் நாயர்(1) ரன் அவுட்டானார். அரைசதம் கடந்த மார்ஷ்(71), வாட்சன் பந்தில் அவரிடமே “கேட்ச்’ கொடுத்து பெவிலியன் திரும்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
விக்கெட் மடமட:
கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி சொதப்பலாக ஆடியது. அனுபவ டிராவிட்(8), ஹாரிஸ் பந்தில் வெளியேறினார். அஸ்னோத்கர்(9) ஏமாற்றினார். ஹாரிஸ் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய வாட்சனும்(24) அதிக நேரம் நீடிக்கவில்லை. சாவ்லா சுழலில் ராஸ் டெய்லர் “டக்’ அவுட்டாக, 4 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து தத்தளித்தது. சிறிது நேரம் அதிரடி காட்டிய பின்னி(30) ஆறுதல் தந்தார். கடைசி கட்டத்தில் மனேரியா(34), ராத்(25) போராட்டம் எடுபடவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை, டெக்கான், ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பஞ்சாப் அணி “ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றது.
ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.
டிராவிட் “1000′
எட்டு ரன்கள் மட்டும் எடுத்த ராஜஸ்தான் அணியின் ராகுல் டிராவிட், ஐ.பி.எல்., அரங்கில் ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 47 போட்டிகளில் பங்கேற்று 4 அரைசதம் உட்பட 1007 ரன்கள் எடுத்துள்ளார்.
—
அதிகபட்ச ஸ்கோர்
நேற்று 195 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* முதல் மூன்று ஓவரில் 52 ரன்களை எட்டிய பஞ்சாப் அணி, ஐ.பி.எல்., வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்த அணி என்ற சாதனை படைத்தது. இதே போல 9.2 ஓவரில் அதிவேக சதம் எட்டி அசத்தியது.
—
வல்தாட்டி முதலிடம்
அதிரடியாக ஆடிய பஞ்சாப் வீரர் வல்தாட்டி, 31 பந்தில் 46 ரன்கள் (3 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார். இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 247 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான “ஆரஞ்ச்’ நிற தொப்பியை கைப்பற்றினார். இரண்டாவது இடத்தில் மும்பை அணி கேப்டன் சச்சின் (4 போட்டி, 236 ரன்கள்) உள்ளார்.
ஸ்கோர் போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட்(கே)டெய்ட்(ப)வாட்சன் 28(16)
வல்தாட்டி(கே)டெய்ட்(ப)வார்ன் 46(31)
ஷான் மார்ஷ்(கே)+(ப)வாட்சன் 71(42)
கார்த்திக்(கே)யாக்னிக்(ப)டெய்ட் 21(16)
நாயர்-ரன் அவுட்-(பின்னி/வாட்சன்) 1(3)
மெக்லாரன்(கே)ராத்(ப)டெய்ட் 2(7)
சன்னி சிங்-அவுட் இல்லை- 5(5)
சாவ்லா(ப)டெய்ட் 4(3)
உதிரிகள் 17
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 195
விக்கெட் வீழ்ச்சி: 1-67(கில்கிறிஸ்ட்), 2-105(வல்தாட்டி), 3-175(கார்த்திக்), 4-178(நாயர்),5-183(மார்ஷ்), 6-190(மெக்லாரன்), 7-195(சாவ்லா).
பந்துவீச்சு: திரிவேதி 4-0-59-0, டெய்ட் 4-1-22-3, வார்ன் 4-0-50-1, வாட்சன் 4-0-24-2, பின்னி 2-0-18-0, மனேரியா 1-0-7-0, ராத் 1-0-8-0.
ராஜஸ்தான் ராயல்ஸ்
அஸ்னாத்கர்(ப)பிரவீண் 9(9)
டிராவிட்(ப)ஹாரிஸ் 8(7)
வாட்சன்(கே)சாவ்லா(ப)பிரவீண் 24(16)
பின்னி(கே)சாவ்லா(ப)மெக்லாரன் 30(24)
டெய்லர் எல்.பி.டபிள்யு.,(ப)சாவ்லா 0(5)
மனேரியா(கே)மார்ஷ்(ப)பட் 34(26)
ராத்(கே)ஹாரிஸ்(ப)பட் 25(21)
யாக்னிக்-அவுட் இல்லை- 10(9)
வார்ன்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 2
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 147
விக்கெட் வீழ்ச்சி: 1-12(டிராவிட்), 2-18(அஸ்னாத்கர்), 3-47(வாட்சன்), 4-49(டெய்லர்), 5-99(பின்னி), 6-124(மனேரியா), 7-140(ராத்).
பந்துவீச்சு: பிரவீண் 4-0-22-2, ஹாரிஸ் 4-0-34-1, பட் 3-0-20-2, சாவ்லா 4-0-24-1, வல்தாட்டி 2-0-19-0, மெக்லாரன் 2-0-24-1, நாயர் 1-0-3-0.
Leave a Reply