பொறியியல் படிப்பிற்கு பெண்களிடம் ஆர்வம் குறைவு

posted in: கல்வி | 0

tblgeneralnews_40533083678சென்னை: பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் நேற்று “ரேண்டம்’ எண் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர் களை விட அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கவுள்ளது. கவுன் சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 572 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் 308 பேர், ஒன்றிற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து பொறியியல் கவுன் சிலிங்கிற்கு விண்ணப்பித்த, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 மாணவர்களுக்கு நேற்று “ரேண்டம்’ எண் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, செயலர் கணேசன், தொழில் நுட்ப கல்வி இயக்குனர் ஜெயக் கொடி, சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், பதிவாளர் சண்முகவேல் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ் கலந்து கொண்டனர். கம்ப்யூட்டர் மூலம் பத்து இலக்க எண் உருவாக்கப்பட்டு, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பிரத்யேக “ரேண் டம்’ எண் வழங்கப்பட்டது.

மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் (தீதீதீ.ச்ணணச்தணடிதி.ஞுஞீத), தங்களது விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு, தங்களுக்கான “ரேண்டம்’ எண்ணை தெரிந்து கொள்ளலாம். அத்துடன், மாணவர்கள் விண் ணப்பத்தில் குறிப் பிட்டுள்ள தகவல்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் சரிபார்த்துக் கொள் ளலாம். இதில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை – 25 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் கணிதம் (100), இயற்பியல் மற்றும் வேதியியல் (தலா 50) என 200 மதிப்பெண்ணிற்கு “கட்-ஆப்’ கணக்கிடப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே “கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்தால், கணிதத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம், இயற்பியலில் பெற்ற மதிப்பெண் சதவீதம், நான்காவது விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம், பிறந்த தேதி (மூத்தவர்களுக்கு முன்னுரிமை), “ரேண்டம்’ எண் (உயர்ந்த மதிப் புள்ள எண்ணிற்கு முன்னுரிமை) என்ற வரிசையின்படி தர வரிசை நிர்ணயிக்கப்படும். கவுன்சிலிங்கிற்கு விண்ணப் பித்துள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேரில், 80 ஆயிரத்து 891 பேர் மாணவர்கள்; 51 ஆயிரத்து 373 பேர் மாணவிகள். பிளஸ் 2 பொதுத் தேர்வில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு இரண்டிலும் மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 146 மாணவர்களும், இரண்டு லட்சத்து 90 ஆயிரத்து 76 மாணவிகளும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் மாணவர்களை (80,891) விட மாணவிகள் (51,373) எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. வரும் 25ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 5ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஜூலை 9ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப்பிரிவு மாணவர் களுக்கு ஜூலை 10ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்குகிறது. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கிற்கு இடையே ஜூலை 20ம் தேதி, வெளிமாநில மாணவர்களுக் கான கவுன்சிலிங் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *