நியூயார்க்: ஒருவரது பெயரைச் சொல்வதால் அல்லது கேட்பதால் உடனே அவர் மீது வெறுப்பு ஏற்படுகிறது என்றால், தவறு நிச்சயமாக உங்கள் பெயரில் தான்.
ஒரு மனிதனிடம் இருந்து மற்றவரை அடையாளப்படுத்தவே பெயர்கள் பயன்பாட்டில் உள்ளன. இதை புரிந்து கொள்ளாமல், “எனக்கு இந்தப் பெயர் தான் பிடிக்கும், இது பிடிக்காது’ என்று சொல்வது சரியல்ல. அவ்வகையில், அமெரிக்காவில் எந்த பெயர் அதிகம் வெறுக்கப்படுகிறது என பார்ப்போமா?
பொதுவாக, அமெரிக்கர்கள் பலரும் ஆண், பெண் பால் வேறுபாடு உடைய மற்றும் இல்லாத பெயர்களை எளிதில் வெறுக்கின்றனர். அதாவது, ஆண்களுக்கு இருக்கும் பெயரே, பெண்களுக்கும் இருக்கும். நம்மூரில் விஜி என்பது போல் அங்கு, மேடிசன் என்றும், அடிசன் என்றும் உள்ளன. அதுபோல், உச்சரிப்பில் சிக்கலாக இருக்கும் பெயர்களையும் வெறுக்கின்றனர். எழுத்துக் கூட்டி எழுதும் போது, சிக்கலாக இருக்கும் பெயர்களையும் வெறுக்கின்றனர். அடுத்ததாக, ஆண்களுக்கு ஜேய்டன், பிராய்டன், ஏய்டன், ஹெய்டன் மற்றும் காய்டன் என “ன்’களில் முடியும் பெயர்களையும், பெண்களுக்கு, “மெக்’ என துவங்கும் (மெக்கன்சி, மெக்கன்னா, மெக்காய்லா) பெயர்களை கேட்டாலே பலர் அலறுகின்றனர்.
ஒரு சிலர் மிக எளிமையான பெயர்களை வெறுக்கின்றனர். நமது ஊரில், தடுக்கி விழுந்தால், ராஜா அல்லது லட்சுமி இருப்பது போல், அமெரிக்காவில் மைக்கேல், மேத்யூ என்பது சகஜம். இந்த பெயரைக் கேட்டாலே, அமெரிக்கர்கள் காதில் புகை வருகிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்கும் நோக்கில் தற்போது, பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளாக, பத்தில் நான்கு குழந்தைகளுக்கு “நேவியா’ என பெயர் வைக்கப்படுகிறது. காரணம், இந்த பெயரின் ஆங்கில எழுத்துகளை தலைகீழாக எழுதினால், ஹெவன் (சொர்க்கம்) என வருகிறது. எனினும், பெயர் வைப்பதற்கென வரைமுறை ஏதும் பெரும்பாலானோருக்கு கிடையாது. ஒரு சிலர் இந்த பெயர் வைத்தால், தன் மகன், மகள் புகழ்பெறுவர் என்பதாலும், சிலர் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதாலும், ஹோப், ஹண்டர், பெர்த்தா, ஜேக்சன் என பெயர் வைக்கின்றனர்.
hhhhhhhhhh
பெயர் வைக்கும் போது அதன் அர்த்தம் மிகவும் முக்கியம் .நாகரிகம் அல்ல